ஆலங்குடி அரசு பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா

ஆலங்குடி அரசு பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க  தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நடைப்பெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை  அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன்.  விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர்  தலைமை தாங்கினார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியானது சாலை பாதுகாப்புகள் குறித்த பதாகைகள் ஏந்திய படி, ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சிலை, அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம், சந்தப்பேட்டை வழியாக பள்ளி மாணவ மாணவிகள் அணிவகுத்து சென்றனர் .மேலும் நகரின் முக்கிய  வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

இந்நிகழ்வில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கேபிகேடி தங்கமணி மற்றும் கழக நிர்வாகிகள்,முன்னோடிகள்,பள்ளியின் ஆசிரியர்கள்,ஆசிரியைகள், பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − 56 =