ஆலங்குடி அரசு தலைமை மருத்துவருக்கு நட்சத்திர மருத்துவர் விருது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு தலைமை மருத்துவருக்கு நட்சத்திர மருத்துவர் விருதினை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கி பாராட்டினார்.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் மருத்துவர் மு.பெரியசாமி இந்திய மருத்துவசங்கம் தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகம் மற்றும் இந்து தமிழ் திசை ஆகியவற்றால் அரசு நட்சத்திர மருத்துவராக புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்ட்டார்.

இந்நிலையில் இவருக்கு சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாராட்டி, விருதினை வழங்கினார்.

மருத்துவர் பெரியசாமி கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு  இழப்பில்லாத கொரோனா சிகிச்சை அளித்தல், அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்தல் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் மையம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டுள்ளார்.

இவர் இதுவரை 6 புதிய மருத்துவ கருவிகளை கண்டுபிடித்துள்ளார். அதில் கொரோனா நோய் தொற்றாமல் மருத்துவர்களை பாதுகாக்கும் கருவியும் அடங்கும். மேலும் 20 மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டு கருத்தரங்குகள், தேசிய கருத்தரங்குகளில் சமர்பித்து மூன்று முறை சிறந்த ஆராய்ச்சிக்கான விருதினை பெற்றுள்ளார். இதனால் இவருக்கு இவ்விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதில் இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன், யுனிசெப் ஆலோசகர் குகநாதன், தமிழக அரசு மருத்துவ ஆலோசகர் ராஜ்குமார், இந்திய மருத்துவசங்க மாநில தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் ரவிக்குமார், ரவி பட்நாயர், லிம்ரா, முகமதுகனி ஆகியோர் கலந்துகொண்டனர்.