ஆலங்குடியில் பள்ளி சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு தடுப்பூசி திட்டத்தினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ .வீ.மெய்யநாதன் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளால் தமிழகத்தில் பரவலாக இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது, தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக 15- 17 வயது உடையவர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார் அதனடிப்படையில் நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவிகளுக்கு சிறப்பு கோரானா தடுப்பூசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.1 .2022 முதல் 8.1 .2022 வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் 15 -17 வயது உடைய அனைத்து பள்ளி செல்லும் இளம் சீறார்களுக்கும் அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தடுப்பூசி அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்பட உள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அர்ஜுன்குமார், ஒன்றிய குழுத் தலைவர் வள்ளியம்மை-தங்கமணி, ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வி, பள்ளியின் தலைமையாசிரியர் ,திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே. பி. கே டி.தங்கமணி மற்றும் ஆலங்குடி நகர செயலாளர் பழனி குமார் மற்றும் அவைத்தலைவர் செங்கோல் கிருஷ்ணமூர்த்தி, கருணாஸ் ,செல்வம் திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 1 =