ஆலங்குடியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரைநூற்றாண்டு கால கோரிக்கைக்குப் பிறகு ஆலங்குடி தொகுதியில் அரசு கல்லூரியை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர்(பொ)  சேதுராமன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பின்னர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா செல்வம், திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி, கிராம வட்டார வளர்ச்சி கோகுலகிருஷ்ணன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம், ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், அறந்தாங்கி சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன், மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, புதுக்கோட்டை அஞ்சுகா, மீனாட்சிசுந்தரம், வீரமணி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆலங்குடி சுற்றியுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட னர்.  ஆலங்குடி நகர தலைவர் பழனிகுமார் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 − = 33