ஆலங்குடியில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் – கஞ்சா, குடிபோதையில் அருவாளாள் வெட்டி இளைஞர் பலியான சம்பவத்தில் 8 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் கஞ்சா, குடிபோதையில் அருவாளாள் வெட்டி இளைஞர் பலியான சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆலங்குடி பாரதி நகரைச்சேர்ந்த முருகேசன் மகன் செல்லகணபதி (எ) விஜய்(21). இவருக்கும் மற்றுமொரு தரப்பினருடன் ஆலங்குடி கல்லுகுண்டு கரையில் கோஷ்டி மோதலாக இரவு நடந்துள்ளது. இதைதொடர்ந்து கலிபுல்லா நகர் பிள்ளையார்கோவில் அருகில் சென்ற விஜய்யை எதிர் தரப்பு கோஷ்டியினர் அரிவாளால் ஓடஓட விரட்டிச்சென்று வெட்டி கீழே விழுந்த விஜய் சம்பவ இடத்திலயே இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை கடந்த 28ம் தேதி முதல் திருச்சி மண்டல ஐஜி பரிந்துரையின் பேரில் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் மற்றும்  டிஎஸ்பி வடிவேல் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், இச்சம்பவத்தில் சம்பந்தமுடைய 5 நபர்களை கைது செய்து கடந்த ஐந்து தினங்களாக விசாரித்து வந்த நிலையில் நேற்று மேலும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி  செந்தில்ராஜ், வெள்ளைச்சாமி, விமல்ராஜ், வீரமணி, கௌதம், தவசு முருகன், சூரியராஜ், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, வழக்கில் தொடர்புடைய 8 நபர்களையிம் அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை ஆலங்குடி காவல்துறை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.