புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பாலையூர் கண்மாயில் சின்னமடை, பெரியமடை, கோயில் மடை, ராவுத்தர் மடை, ஐயா மடை உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை சர்வே செய்து தூர்வாரி செப்பனிடக் கோரி இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி வேலம் தலைமை வகித்தார், விவசாயிகள் நல்லதம்பி,சேகர், சக்திவேல், சிதம்பரம் நாகலிங்கம், தட்சிணாமூர்த்தி, ராசு,அன்பு காசி ஆகியோர் முன்னிலை வைகித்தனா்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர் சொர்ணகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார், கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் எம்.என்.ராமச்சந்திரன் பேசினார், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஜி.தங்கராஜ்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் சரஸ்வதி, புதுக்கோட்டை நகரச் செயலாளர் ரமேஷ்,கலை இலக்கிய மன்ற பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் மணி செல்லப்பா, சாகுல் ஹமீது சாம்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனா், ஆா்ப்பாட்டம் முடிவில் ஆலங்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.