ஆலங்குடியில் மத்திய அரசின் அக்னிபத் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வடகாடு முக்கத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அறிமுக திட்டமான அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய அளவில் 14 மாநிலங்களில் போராட்டம் வலுப்பெற்று ரயில் எரிப்பு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார்.ஆலங்குடி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழரசன் மற்றும் ஏராளமானோ ர் கலந்துகொண்டனர்.