ஆரியூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக முட்டை

நாமக்கல் அருகே கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தி.மு.க.சார்பில் இலவசமாக தலா 10 முட்டைகள் வழங்கப்பட்டன.

மோகனூர் கிழக்கு ஒன்றியம், ஆரியூர் ஊராட்சியில் சமுதாயகூடத்தில் நடைபெற்ற சிறப்பு கொரானா தடுப்பு ஊசி முகாமினை  நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் துவக்கி வைத்து,  தடுப்புஊசி  போட்டுக் கொண்டவர்களுக்கு தலா பத்து முட்டைகளை வழங்கி னார். இம்முகாமில்  300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் ஆரியூர் ஊராட்சி மக்கள்  100 தவிதம் தடுப்ஊசி போட்டுகொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக முட்டைகளை வழங்க ஏற்பாடு செய்திட்ட மோகனூர் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும்  ஆரியூர் ஊராட்சி திமுக கிளை நிர்வாகிகளையும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர் பெ.நவலடி, மா.விவ.தொழி.அணி இணைச்செயலாளர் கைலாசம், ஆரியூர் முன்னாள் தலைவர் ராஜாகண்ணன் ஒ.வ.அணி ராஜசேகர், முத்துசாமி,கோபி ஊராட்சிதலைவர் சாமிநாதன் ஊராட்சி கழக நிர்வாகிகள்  ரமேஷ்,வேலுச்சாமி,வையாபுரி, செல்லமுத்து, வேலுசாமி, நாட்ராயன்,பிரபு, முருகேசன், சென்னார் ராமசாமி,பொன்னுமணி, குமார்,குமரவேல்,ஆண்டவன்,அண்ணாமலை, மற்றும் தி.மு.க. முன்னோடிகள் கலந்து கொண்டனர்.