ஆரம்பித்த துடிப்புக் குறையாமல் ஐந்து ஆண்டுகளை கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
5 தலைமுறைகளை கடந்தும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்
தற்போது, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், விரைவில் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரடியாக கமல்ஹாசனிடம் ஆதரவு கோரினார். பின்னர் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த கமல்ஹாசன், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 6-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்தநாளில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில், ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.