ஆரணியில் 40 ஆண்டாக வசிப்போர் பட்டா கேட்டு  கண்டன ஆர்ப்பாட்டம்

ஆரணியில் 40 ஆண்டாக வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஆரணி வட்டார தலைவர் நாசினி,   வட்டார செயலாளர் சாந்தி, பொருளாளர் பரிதா, துணை தலைவர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்தையன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தங்கராஜ், வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் மோகன் குமார், கள்ளக்குறிச்சி வெங்கடேசன், ரவிச்சந்திரன் குப்புரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ரசூல், ஷயின்தாஜ், பாரதி, ஜெயலட்சுமி, ரியானா, முனுசாமி, நாராயணன், சுப்பிரமணி, விஜயன், சுப்பிரமணி, பிரபாகரன், சந்திரா, விஜயா, மஞ்சுளா, முனியம்மாள், ஆயிஷா, ஜமால், அசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் தாஜின்பி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 7