ஆரணியில் சாய்பாபா ஜெயந்தி விழா ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி ஏற்பாடு

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியில் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியின் ஸ்ரீ சத்திய சாயி சேவா மந்திரம் கோவில் உள்ளது. இக்கோவிலில், பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 97-வது ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு இன்று விடியற்காலை ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றுதல், சேவாதள் பணிகள், பாதுகாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் நாராயண சேவை எனப்படும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா திருஉருவப்படம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ சத்ய சாயி பஜனையுடன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி, இரவு மகாமங்கள ஆரத்தி நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி கன்வினர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 + = 80