ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு 13 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்,என வெள்ளை மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆப்கானிஸ்தானின் காபூலில் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இன்று ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், விமான நிலையத்தின் நுழைவு வாயில் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தை அடைவதற்காக ஆப்கானியர்கள் கூட்டம் கூட்டமாக நுழைவாயிலில் குவிந்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனையடுத்து, இந்த குண்டுவெடிப்பை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது: காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடித்ததை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த சம்பவத்தில் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் எங்களிடம் இல்லை. எங்களால் முடிந்தால் கூடுதல் விவரங்களை வழங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய தகவலின்படி நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.