ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பயன்படுத்திய விமானங்கள் செயலிழப்பு: தலிபான்கள் கொந்தளிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஜோ பைடன் அரசால் வாபஸ் பெறப்பட்டன. இதனையடுத்து 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்ட அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிய மகிழ்ச்சியில் தாலிபான்கள் ஆர்ப்பரித்தனர்.

ஆனால் தற்போது தாலிபான்களுடன் அமெரிக்கா இட்ட ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு மீறியுள்ளதாக தாலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒப்பந்தப்படி அமெரிக்கா நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்களை ஆப்கானிஸ்தானில் விட்டுச்செல்ல வேண்டும். ஆனால் தற்போது 48 விமானங்கள் மட்டுமே தாலிபான்கள் வசம் உள்ளன.

தாலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளதால் அமெரிக்காவின் வசம் இருந்த ஹெலிகாப்டர்கள் இனி தாலிபானுக்கு சொந்தம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியபோது எழுபத்தி மூன்று போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அவற்றை பயன்படுத்தமுடியாது.தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டதால் இந்த விமானங்கள் தற்போது அரசாங்க சொத்துகள் ஆகிவிட்டன. ஆனால் இவற்றை பயன்படுத்த முடியாததால் இவை அனைத்தும் வீணாகி விட்டன என்று தலிபான்கள் கொந்தளித்து வருகின்றனர்