ஆப்கானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த 2 நிலநடுக்கம் – மக்கள் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தெற்காசியநாடான ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை காலை 9.06 மணிக்கு 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 9. 20 மணிக்கு 5,4 என்ற அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் பத்துக்கும்மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.