ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நூறுக்கும் மேற்பட்டோர் காணவில்லை.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலை கொண்டதால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நூறுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் 3 அரசு பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர். பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

சென்ற வியாழக்கிழமை மாலை முதல் கொட்டத் தொடங்கிய மழை காரணமாக, திருப்பதி திருமலை கோயில் மற்றும் மலைப் பகுதிகளை காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் சூழ்ந்துகொண்டது. சாலைகளில் பேருந்துகளும் கார்களும் அடித்துச் செல்வதையும் காண முடிந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 7 குழுவினர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலைப் பாதையில் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், திருமலையில் உள்ள பக்தா்கள் போக்குவரத்து சீராகும் வரை தங்கள் அறையிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − 59 =