ஆந்திராவில் ஆட்டோ மீது மின் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் ஆட்டோ மீது உயர்மின் அழுத்த கம்பி விழுந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆட்டோ மீது உயர்மின் அழுத்த கம்பி விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். விவசாய வேலைக்காக ஒரே ஆட்டோவில் பலர் சென்றுள்ளனர். இந்த ஆட்டோ சில்லகொண்டையா பள்ளி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து ஆட்டோ மீது விழுந்தவுடன் தீ பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் சிக்கியுள்ளனர். இது குறித்து உடனே மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் மீட்புப்பணியில் ஈடுபட்டபோது உடல் கருகி 8 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த கோர விபத்து குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 − 69 =