ஆதனக்கோட்டை – ஆலங்குடி சாலை வலுப்படுத்தும் பணி அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்டம், ஆலங்குடி உட்கோட்டம் – திருவரங்குளம் பிரிவு பராமாப்பில் உள்ள ஆதனக்கோட்டை ஆலங்குடி சாலையில் கி.மீ.17 முதல் 18 வரை ரூ.100.00 இலட்சம் மதிப்பில் அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கண்காணிப்புப் பொறியாளர் எம்.பி.விஜயலெட்சுமி, தலைமையிலான குழு உள்தணிக்கை ஆய்வு மேற்கொண்டனர்.

இச்சாலைப்பணியில் ஒருவழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த ஆய்வில் சாலையில் அகலம், தடிமன் மற்றும் சாய்தளம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், தஞ்சாவூர் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப் பொறியாளர் வி.சரவணன், திருச்சிராப்பள்ளி நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவிக் கோட்டப் பொறியாளர் கே.பிரபாகரன் மற்றும் இளநிலைப் பொறியாளர் எம்.எழிழரசன், உதவிப் பொறியாளர் சி.இளங்கோவன் ஆகியோர் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர்கள் பெ.நடராஜன், பி.ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர்கள் கே.எஸ்.ஜனனி, என்.கோட்டை ராவுத்தர் மற்றும் எஸ்.தியாகராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 + = 85