புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டையில் ராகுல்காந்தியின் காங்கிரஸ் இந்திய ஒற்றுமை நடைபயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வெற்றி அடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் ஆதனக்கோட்டை கடைவீதியில் காங்கிரசார் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்தநிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கேஎம்.ராஜகோபால் தலைமையில் முன்னாள் ஒன்றியத்தலைவர் எஸ்.ராமமூர்த்தி கொடிஏற்றினார், பார்வதி தமிழ்வாணன் கிழக்கு வட்டாரத் தலைவர் அ.ஜெய்சங்கர், சுப்பிரமணி ,முத்துஅய்யர் வாராப்பூர் நடராஜன், ஆதனக்கோட்டை சங்கர் மற்றும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.