ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆதனக்கோட்டை கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மடத்துக்கடை சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆதனக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மாகாந்தி வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணகரத்தினம் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.