ஆண்டிமடம் அருகே திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே, விளந்தை அகத்தீஸ்வரர் சிவன் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சிவனடியார்கள் தொண்டு மன்ற நிர்வாகிகள் பலர் முன்னின்று நடத்திய இந்த, திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில், சிவனடியார்களுக்கு, அரியலூர் மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் ஏ.வி.எம். சாமிநாதன், சால்வை அணிவித்து பாராட்டினார். பக்த பிரமுகர் சண்முகம் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.