புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆசைக்கு இணங்காத பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அவதாரம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்த போது என்ற இளைஞர் அருகே உள்ள களரி பட்டியைச் சேர்ந்த வெள்ளைக்கண்ணு மனைவி சத்தியா என்பவரிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இதனை சத்யாவின் உறவினர்கள் கண்டித்ததையடுத்து பூபதியிடம் பழகுவதை சத்தியா நிறுத்திக் கொண்டு உள்ளார்.
எனினும் பூவதி தொடர்ந்து சத்யாவை துன்புறுத்தி வந்த நிலையில் கடந்த கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் களிரிபட்டியில் உள்ள சத்யாவின் வீட்டருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த சத்யாவை பூபதி கழுத்தையறுத்து கொலை செய்துள்ளார்.இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையின் முடிவில் பூபதி சத்யாவை கொலை செய்தது உறுதியானதையடுத்து அவருக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சத்திய தீர்ப்பு வழங்கினார்.இதனையடுத்து குற்றவாளி பூபதி பலத்த பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
