ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணைய வழி வாயிலாக விண்ணபங்கள் பெறப்பட்ட நிலையில்., 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3  நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − 31 =