ஆசிய செஸ் போட்டியில் அரியலூர் மாணவி தங்கம்தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு: வாழ்த்து

ஆசிய சதுரங்கப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த, அரியலூர் மாவட்ட மாணவிக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இது பற்றி சென்னையில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த 7 வயது மாணவி சர்வானிகா. இவர் சமீபத்தில் இலங்கையில் ஆசிய அளவில் நடைபெற்ற (செஸ்) சதுரங்க மூன்று பிரிவு போட்டியில், 19 சுற்றுகளிலும் வெற்றி பெற்று, 6 தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

அவரை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் சுபாஷ் அழைத்து பாராட்டினார். தகவலறிந்த மனிதநேய அறக்கட்டளை தலைவர், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சர்வானிக்காவை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.

அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் செல்வமணி, மற்றும் மாணவி சர்வானிகாவின் பெற்றோர் சரவணன் – அன்புரோஜா ஆகியோர் உடன் வந்தனர். தொடர்ந்து “அரசி” திரைப்பட தயாரிப்பாளர்கள் ராஜராஜா, ஆவடி வரலட்சுமி ஆகியோர், தங்கள் சிம்பொனி டிஜிட்டல் ஸ்டுடியோவிற்கு அழைத்து பாராட்டினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.