பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த ஆக்ஸ்போர்டு ஹோட்டல் நிர்வாகம் மற்றும் சமையற்கலை கல்லூரி மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பேரிடர் காலங்களில் அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும், பேரிடர் மீட்புக் குழுவினர், பேரிடர் நடக்கும் இடங்களுக்கு உடனடியாக செல்ல தாமதம் ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் பயிற்சி பெற்ற உள்ளூர் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தால் உயிர் சேதத்தை தடுக்க பேருதவியாக இருக்கும் என்ற காரணத்தினால் இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரி மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த ஒரு வார கால பயிற்சி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புபடை பயிற்சி மையத்தில் பேரிடர் மேலாண்மை பட்டாலியன் 04 பல்வேறு துறையை சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி கடந்த ஒரு வார காலமாக வெற்றிகரமாக அளிக்கப்பட்டது.
வெற்றிகரமாக பயிற்சி முடித்த மாணவர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவர் சமுதாயம் மூலம் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இன்றைய காலகட்டத்தில் சரியான வழிமுறை என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் பாராட்டினார்.
உடன் கல்லூரி நிறுவனர் சுரேஷ், முதல்வர் ராதா, மேலாளர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் கல்வியக அலுவலர்கள் உடன் இருந்தனர்.