அறந்தாங்கி ஸ்ரீ வீரசக்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு 

அறந்தாங்கி அருகே விஜயபுரம் 

ஸ்ரீ வீரசக்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரம் கிராமத்தில் 

ஸ்ரீ வீரசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதன அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டு கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காலையாக பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நாளான இன்று  இரண்டாம் கால யாக பூஜை முடிவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது கடம்புறப்பாடானது  கோயிலை சுற்றி வலம் வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்தது. சுப்பிரமணியபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற

மஹா கும்பாபிஷேக விழாவில் விஜயபுரம்,மங்கள நாடு, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 3 =