அறந்தாங்கி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் அறந்தாங்கி வட்டார விவசாயிகளுக்கு மின்னனு மூலமாக வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் செய்தல் பற்றிய விவசாயிகள் மாநிலத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு செல்லப்பட்டது.
இப்பயணத்திற்கு அறந்தாங்கி வட்டார வேளாண்மை வேளாண்மை உதவி இயக்குநர் சி.பாஸ்கரன் தலைமை வகித்து இப்பயணத்தை துவக்கி வைத்தார். பிறகு பெருந்துறையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு செல்லப்பட்டு இந்நிலைய மேற்பார்வையாளர் அரவிந்நதன் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், பராமரிப்பு முறைகள் குறிப்பாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட வேளாண் விளைபொருட்களை மின்னனு மூலமாக விற்பனை மற்றும் சந்தை படுத்துதல், தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்தல், விலை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு வேளாண் விளை பொருட்களை ஏலம் விடுதல் பற்றி இந்திலையத்தில் தினசரி நிகழும் பணிகளின் வாயிலாக நேடியாக விவசாயிகளை அழைத்துச்சென்று காண்பித்து விளக்கமளித்தார்.
பின்பு இந்நிலைய அலுவலர் தாமோதரன் இந்நிலையத்தின் கிடங்குகள், கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருட்கள், அவற்றிகான வாடகை, மானியம், கடன் வழங்குதல், சூரிய சக்தி உலர் கலன்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்து காண்பிக்கப்பட்டது. முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி.ரவிராஜன் வரவேற்று நன்றி கூறினார். இப்பயணத்தில் அட்மா திட்ட அலுவலர் விவசாயிகளை அழைத்து சென்று வந்தனர்.