அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறானிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடையாள அட்டை, யுபிஐ கார்டு மற்றும் மனுக்களும் பதிவு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் வழங்கப்பட்டது, மேலும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் அறந்தாங்கி பரணி,ஆவுடையார்கோவில் கவிதா, மணமேல்குடி நாகநாதன் மற்றும் அறந்தாங்கி துணை வட்டாட்சியர் பாலமுருகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்ட அத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.