புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் நேற்று சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது
நகராட்சி ஆணையர் லீமாசைமன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு
தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மற்றும் நகர மன்ற தலைவரை கேட்டுக்கொண்டனர். 12 வது வார்டு உறுப்பினர் விஸ்வமூர்த்தி பேசுகையில்
பழனியில் நடைபெற இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு பக்தர்களின் வசதிக்காக அறந்தாங்கியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். வார்டு உறுப்பினர்களின் கோரிக்கையையடுத்து நாளை முதல் அறந்தாங்கியில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது