அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மா உணவகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததால் DYFI இளைஞர்கள் உணவகத்தில் உள்ள தண்ணீர் டேங்குக்கு அஞ்சலி செலுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெரும் வகையில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் அமைத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றனர். தற்போது நடந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் அம்மா உணவகங்கள் சிறப்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.அறந்தாங்கி அம்மா உணவகத்தில்  செயல்பட்டு வந்த தூய குடிநீர் வழங்கும் ஆர் ஓ பழுதடைந்து சரி செய்யப்படாத காரணத்தினால் உணவகம் முழுவதும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அறந்தாங்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்த்தினர் இதனை கண்டித்து மாலை மற்றும் மேல தாளத்துடன் கண்டன கோஷங்கள் எழுப்பி  அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததால் DYFIஉணவகத்தில் உள்ள தண்ணீர் டேங்குக்கு அஞ்சலி செலுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போரட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கோபால்,கவுதம், பாண்டி்,காதீர், சங்கர்,தினேஷ் காளிதாஸ்,கவி பாலா,கருணா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த தங்கராசு, தென்றல் கருப்பையா உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள   நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1