அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரணக் கூட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கலந்து கொண்ட அ.தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் தங்களுடைய வார்டு பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும். அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் சமமாக நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குழந்தைசெல்வம், சந்திரமோகன், சத்யா, சுயேட்சை உறுப்பினர் செளந்திரராஜன் ஆகியோர் தாங்கள் வார்டு பகுதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த தலைவர் மகேஸ்வரி, அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், அனைத்து பகுதிகளுக்கும், மக்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 18