அறந்தாங்கி அருகே வேன் மோதி விவசாயி பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கிராமத்தைச்  சேர்ந்தவர் விவசாயி ரவி. இவர் கூகனூரில் உள்ள தனது வயலினை பார்வையிடுவதற்காக சைக்கிளில் நாகுடி அருகே சென்ற போது சுப்பிரமணியபுரத்திலிருந்து நாகுடி நோக்கி அதிவேகமாக வந்த  வேன் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். வேன் ஒட்டுநர் தப்பி ஓடிய நிலையில் விபத்து குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − 67 =