புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கிராமத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது புகழ்பெற்ற இத்திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 13 -ம் நாளான இன்று திருவிளக்கு பூஜை கோபாலகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணன் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் வெட்டிவயல் விஸ்வநாதபுரம் இடையன்கோட்டை திட்டகுடி சீனமங்கலம் மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைவரன், திருமணவரன் சுமங்கலி பாக்கியம் வேண்டி திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.