அறந்தாங்கி அருகே திட்டகுடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் 10 சவரன் நகை, ரொக்கப்பணம் கொள்ளை.நாகுடி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் – லலிதா தம்பதியினர். இருவரும் தங்களுடைய வயலில் களையெடுக்க சென்ற நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் இருந்தவர்கள் ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக வீட்டிற்கு வந்த ராமச்சந்திரன் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் பிரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாகுடி போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


