அறந்தாங்கி அருகே மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் பலி

அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்ற இளைஞர் மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் நாகலிங்கம்(28). இவர் தனது நண்பர்களான அஜீத்,அழகர், புகழேந்தி, பாலமுருகன் உள்ளிட்டோருடன் நேற்று மதியம் மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள கூத்தையா குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது நாகலிங்கம் நீண்ட நேரமாகியும் குளித்துவிட்டு கரை திரும்பாததால் சந்தேகமடைந்த நண்பர்கள் குளற்றில் இறங்கி தேடியுள்ளனர். பின்பு அறந்தாங்கி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகலிங்கத்தை தேடினர். அப்போது குளற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் நாகலிங்கத்தின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மது போதையில் குளத்தில்  குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயரிழந்த சம்பவம்  கூத்தாடிவயல் கிராமத்தில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில்  கூடியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி போலீசார் நாகலிங்கம் மது போதையில் குளத்தில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − 68 =