அறந்தாங்கி அருகே நெல்மணிகளை மிதித்து பிரேதத்தை எடுத்துச் செல்லும் அவலம்

எட்டிச்சேரி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை இல்லாமல் விளை நிலங்களில் நெல்மணிகளை மிதித்து பிரேதத்தை  எடுத்துச் செல்லும் அவல நிலை காலங்காலமாக தொடர்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குன்னூர் ஊராட்சி எட்டிச்சேரி  கிராமத்தில் நடேசன் என்பவர் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தி உள்ளார். அவரது பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல சரிவர பாதை இல்லாததால் விளைந்த நெல்மணிகளை மிதித்து பிரேதத்தை மயானத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து இப்பகுதியில் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர அரசு முன்வர வேண்டும்.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எட்டிச்சேரி  குடியிருப்பு பகுதி மக்களின் பிரதான கோரிக்கையை கவனத்தில் கொண்டு மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 3