அறந்தாங்கி அருகே நடைபெற்ற பேரிடர் மேலாண்மை விளக்க செய்முறை மற்றும் பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மன்னகுடி ஊராட்சியில் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் பேரிடர் மேலாண்மை விளக்க செய்முறைகளும் பேரணி ஊராட்சி மன்றத் தலைவர் லதாராஜா தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அறந்தாங்கி துணை வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இறையருள்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகர்,வெங்கட்ராமன் கிராம நிர்வாக அலுவலர் யோகராஜ் முன்னிலையில் பேரணியும் பயிற்சியும் நடைபெற்றது.

இதில் பேரிடர் மேலாண்மை தன்னார்வ தொண்டர்கள், கிராம ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுவாமிநாதன் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட  மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் இனிப்புகள் நோட்டு,பேனா பென்சில் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 + = 37