
டிசம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதனை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொடிவயல் ஊராட்சி சார்பில் டிசம்பர் -17ம் தேதி இளைஞரணி மாநில மாநாட்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். சின்னமாடு,4 பல்கன்று என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை,தஞ்சை திருச்சி,தேனி,மதுரை சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாட்டுவண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன போட்டியில் கலந்து கொண்ட இரட்டைமாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தன போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றமாட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
விழாவிற்கு வருகை தந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு மலர் தூவி மேள தாளங்களுடன் இளைஞரணி சார்பாக உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பந்தய நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சரிதாமேகராஜன், ஒன்றியக்குழுஉறுப்பினர் அருள்நம்பி, ஊராட்சிமன்ற தலைவர் வெண்ணிலா பாலமுருகன், மாவட்ட இலக்கிய அணி செல்வராஜ்,
இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில் வழக்கறிஞர்கள் திருமுருகன், தமிழ்வாணன்,கதிரேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் பந்தய ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.