அறந்தாங்கி அருகே கனமழை காரணமாக இடிந்து விழுந்த வீடு;அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குளமங்கலம் தெற்கு ஊராட்சியை சேர்ந்தவர்கள் செல்லத்துரை – கருப்பாயி தம்பதியினர்.இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்ததால் தனியாக  செல்லத்துரையின் தந்தை காலத்தில் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.அந்த மழையின் போது செல்லத்துரையின் வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்து இடிந்து கீழே விழுந்துள்ளது.அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்கப்பட்டது.இந்நிலையில் தங்குவதற்கும் உணவிற்கும் கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இந்த வயதான தம்பதியினர். 

வயதான காலத்தில் கணவரின் உடல்நிலையும் சரியில்லாமல் இருப்பதால், தான் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து குடும்பத்தை கவனித்து வருவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரத்திற்கும் இருப்பிடத்திற்கும் வழி செய்ய வேண்டும் எனவும் கண்ணீருடன் தெரிவித்தார் கருப்பாயி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 − = 33