அறந்தாங்கி அருகே ஆமாஞ்சி  ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆமாஞ்சி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது

 இந்த நிகழ்ச்சியில் துரையரசபுரம், இடையன்காடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு முன்னிலையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிசு பொருட்கள் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் பற்றாளர் ரத்தினமாலா, ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணன், தன்னார்வலர் மனோகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவ, மாணவிகள், அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 − 79 =