அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் தமிழர் தேசம் கட்சி மாநிலத் தலைவர் கே.கே.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சதயவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை தமிழர் தேசம் கட்சி மாநிலத் தலைவர் கே.கே.செல்வகுமார் தொடங்கிவைத்தார். போட்டியில் திருச்சி,தஞ்சாவூர் கோவை, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாட்டுவண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன. பெரியமாடு, நடுமாடு கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன, போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கப்பரிசும் சிறப்புக் கோப்கைகளும் வழங்கப்பட்டது, பந்தைய நிகழ்ச்சியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர், மேலும் அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.