
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் அரசு போக்குவரத்து பணிமனை நீண்ட காலமாக இயங்கி வருகிறது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை முன்பாக அரசு வேகத்தடை அமைத்துக் கொடுத்திருக்கிறது ஆனால் அறந்தாங்கி பனிமனை முன்பாக வேகத்தடை இல்லை. இதனால்அந்தப் பணிமனையில் வேலை செய்த அரசு ஊழியர் இளமுருகன் என்பவர் பனிமலையில் வேலை செய்துவிட்டு வெளியே வரும்பொழுது விபத்துக்குள்ளாகி அதே இடத்தில் இறந்துள்ளார்.
அதேபோல பல ஊழியர்கள் அடிபட்டு கைகால் முறிந்து வேலை செய்ய முடியாமல் விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வீட்டில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் அடிக்கடி பணிமனை முன்பாக விபத்து நடக்கின்ற காரணத்தினால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தினம் தோறும் இரவு பகலாக வேலை செய்துவிட்டு வெளியே வரும் பொழுதும், உள்ளே செல்லும் பொழுதும் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி இறப்பதும் உடல் உறுப்புகள் சேதம் அடைவதும் தொடர்கதையாக இருந்து வருவதாக பணிமனை ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே அரசு ஊழியர்களின் போக்குவரத்து துறை ஊழியர்களின் நலம் கருதி உடனடியாக அறந்தாங்கியில் இருக்கின்ற போக்குவரத்து பணிமனை முன்பாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.