
அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2011- 2014 ஆண்டு பயின்ற அமைப்பியல் துறை மாணவர்கள் தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் அதிகரித்து வரும் வாகனங்களின் புகையினால் காற்று மாசு படுவதை தடுக்கும் நோக்கத்தோடு கல்லூரி வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைத்தனர். கல்யாணமுருங்கை, நாகமல்லி, வெள்ளைதூதுவளை, கஸ்தூரி மஞ்சள் உள்பட 231 வகையான செடிகளை கல்லூரி முதல்வர் (பொ) குமார் தலைமையில் பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஊர்வணி ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், ஆகியோர் செடிகளை நட்டு துவக்கி வைத்தனர்.

முன்னாள் மாணவர்கள் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் சர்வம் சரவணன், பொறியாளர்கள். பா.விஜய், க.சரவணன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் 231 வகையான மூலிகை செடிகளை நட்டு தோட்டம் அமைத்தனர். அறந்தாங்கி பகுதியில் சிறந்த மூலிகை தோட்டம் அமைத்து பொதுமக்கள் பார்த்து. பயன்பெறும் வகையில் முன்னுதாரமாக திகழும் மூலிகை தோட்டம். கல்லூரி முதல்வர் (பொ) குமார் தலைமையில். பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மணி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
