அறந்தாங்கியில் கொட்டும் மழையில் கருணாநிதியின் கவியரங்கம் குடைபிடித்து ரசித்த அமைச்சர்கள்

அறந்தாங்கியில் கொட்டும் கனமழையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை குறித்த கவிதைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் மெய்யநாதனும் குடைபிடித்து நின்றவாறு கேட்டு மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கவியரங்கம்  நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட ராஜேந்திரபுரத்தில் நடந்த கவியரங்கத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வைத்தார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்றார். கவிஞர் விவேகா தலைமையில் வரலாற்று தலைவர் வான் புகழ் கலைஞர் என்ற தலைப்பில் கவிஞர்கள் ஆண்டாள் பிரியதர்ஷினி, ரவி பாரதி,தஞ்சை இனியன், கங்கை மணிமாறன், இளையகம்பன் ஆகியோர் கலந்து கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தில் அறந்தாங்கி ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் அறந்தாங்கி சேர்மன் ஆனந்த் மாவட்ட கவுன்சிலர் சரிதா மேகராஜன் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார் நிர்வாகிகள் துளசிராமன், செந்தமிழ் செல்வன்,நல்ல கூத்தன்,கருணாநிதி, மணிமொழியன், மன்னகுடிசோமு.கண்ணன் ராஜேஸ்வரி செல்வம்.குணவிநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக ஒன்றிய அவை தலைவர் கருணாநிதி நன்றி கூறினார். கவியரங்க முடிவில் கனமழை பெய்தபோது அந்த கனமழையின் போது கவியரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சாதனைகள் குறித்து கவிஞர்கள் பேசியதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் சுற்றுச்சூழல் துறை அமைச்சின் மெய்யநாதனும் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு நின்று கேட்டு மகிழ்ந்தனர்.  கனமழை பெய்தாலும் கூட்டத்திற்கு வந்திருந்த ஆண்களும் பெண்களும் கூட்டம் நடந்த பகுதியிலுள்ள கடைகளின் சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்று முன்னாள் முதல்வரின் சாதனை கவிதைகளை கேட்டு மகிழ்ந்தனர்.