அறந்தாங்கியில் இலவச மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ராயல் பார்மஸி மற்றும் கிளினிக், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் திசைகள் வழிகாட்டு அமைப்பு இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமை நகர்மன்ற தலைவர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கி  துவங்கிவைத்தார். மருத்துவர் தெட்சிணாமூர்த்தி தலைமையில், ரோட்டரி துணை ஆளுநர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் விகாஸ் சரவணன் முன்னிலை வகித்தார். திசைகள் முகம்மது முபாரக் நன்றி கூறினார். நகர்மன்ற உறுப்பினர் அசாரூதீன், அப்துல் ரஹ்மான், முபாரக் அலி, மருத்துவர் விஜய், கார்த்தி, லேப் டெஸ்டர் குமார், சமூக சேவகர்கள் சலீம், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இம்முகாமில் மருத்துவர்கள் முகம்மது அலி ஜின்னா, முகம்மது அசாரூதீன், தாரணி, சஷ்னா, அஸிலா, முகம்மது கனி, அஜய் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்றினார்.

பொது, தோல் நோய், குழந்தைகள் நலம், மகப்பேறு மற்றும் மகளிர் நலன், கண், எலும்பியல் உள்ளிட்ட அனைத்து வகை மருத்துவம் குறித்த ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், இரத்த அளவு, இசிஜி, இரத்த அழுத்தம், பிஎம்ஐ மற்றும் உயரம், உடல் எடை உள்ளிட்ட அனைத்து  பரிசோதனைகளும் இலவசமாக பார்க்கப்பட்டன. இம்முகாமில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 10 = 16