அரியலூர் ஸ்ரீராம் ஹை டெக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரியலூர் ஸ்ரீராம் ஹை டெக் பள்ளியில் எக்சிபிஷன் வேர்ல்ட் எனப்படும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இது பற்றி  பள்ளியின் செயலாளர், பெரியசாமி ஆசிரியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

அரியலூர்,  ராஜாஜி நகரில் உள்ள, ஸ்ரீராம் ஹை டெக் பள்ளியில், எக்சிபிஷன் வேர்ல்ட் எனப்படும் அறிவியல்  கண்காட்சி துவக்க விழா, பள்ளி தாளாளர் இளவரசி  தலைமையில்  நடைபெற்றது. கண்காட்சியை வக்கீல்கள் சங்கத் தலைவரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான  மனோகரன் துவக்கி வைத்தார்.


எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும், மாணவ மாணவிகள் செயல்படுத்தி  காட்டிய, கழிவு நீர் சுத்திகரிப்பு, எரிமலை வெடிப்பு, ஆற்றல் மாற்றம், காற்றாலை மின் உற்பத்தி, சோலார் சிஸ்டம், மேஜிக் மேக்ஸ், ஹியூமன் பாடி, தமிழ் இலக்கணம், இங்கிலீஷ் கிராமர், உள்ளிட்ட அறிவியல் கண்காட்சியை, திருச்சி மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கச் செயலாளர் லயன் டாக்டர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி  ராஜஜெயம்  உள்ளிட்டோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு,  கண்காட்சியை  பார்வையிட்டு  மாணவ, மாணவியர்களை பாராட்டினர்,  இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர், ஆசிரியைகள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + = 12