அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறி நோய் தடுப்பூசி முகாம்

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் வெறி நோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி அருகே நடைபெற்ற வெறி நோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடக்க விழாவுக்கு அரியலூர் மாவட்ட  ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா வெங்கடாஜலபதி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.

கல்லங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு, கால்நடை மருத்துவர்களால் வெறி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பாரத் பவுண்டேஷன் நிர்வாகி ஆல்வின், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் அமீது அலி, துணை இயக்குனர்கள் சொக்கலிங்கம், வில்பர் ராஜ், கால்நடை மருத்துவர்கள் குமார், ராஜா, வேல்முருகன், பிரபாகரன், மற்றும் கால்நடை மருத்துவ உதவியாளர்கள், பணியாளர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2