அரியலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு தனிக்கட்டிடம்: முதல்வரிடம் மனு அளிக்க முடிவு

அரியலூர் பல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டம் மன்றத்தில் நடைபெற்ற, மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கு, அதன் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அசோகன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் முகிலன் தீர்மானங்களை படித்தார்.

பல்வேறு அலுவலக செலவினங்கள் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், அரியலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு, தனியாக இடம் ஒதுக்கி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாத கடைசியில், அரியலூருக்கு வருகை தரும்  முதல்வரிடமும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக நிர்வாகிகள் சிவக்குமார், ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, ஷகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனலட்சுமி, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − = 48