அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாதோர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

காது கேளாதோர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி,  கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னப்பன் தலைமையில், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

80 சதவீதத்துக்கு மேல் காது கேளாமை உள்ளவர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வில், தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு வரிசை அடிப்படையில், அரசுத்துறையில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை, வருவாய் துறைக்கு பதிலாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றி, 3000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.


காது கேளாதோருக்கு, ஆவின் பாலகம் அமைத்து தருவது குறித்து பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பாக, மாநில நலவாரியத்தில் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதில் சங்க செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் அந்தோணி, பொருளாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், சபரி, விக்னேஷ், சுரேஷ், ராஜேஷ், செயற்குழு உறுப்பினர் வைஷ்ணவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + = 16