அரியலூர் மாவட்டம் ஸ்ரீ ராமன் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், ஸ்ரீராமன் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, மேலும் இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில், சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மேலும் 148 பயனாளிகளுக்கு, 40 லட்சத்து 4 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, வழங்கி பேசினார்.
இம்முகாமில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், ஆண்டிமடம் வட்டாட்சியர் கலிலூர்ரகுமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகிர் உசேன், நாராயணன், ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.