அரியலூர் மாவட்டம்-அய்யூர் கிராமத்தில்  புதிய மின் மாற்றி தொடக்கம்

அரியலூர் மாவட்டம் அய்யூர் கிராமத்தில் புதிய மின் மாற்றி, தொடக்க விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், அய்யூர் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில், புக்குழி கிராமத்துக்கான ,மின் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி  வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யூர் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில், மத்திய, மாநில அரசின் தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா நிதியுதவி திட்டத்தின்கீழ், ரூ.64.5 இலட்சம் மதிப்பீட்டில், புதிய 11 கேவி புக்குழி மின் பாதையை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  இயக்கி வைத்தார். இந்த புதிய 11 கேவி புக்குழி மின் பாதையின்மூலம், காங்குழி, சிலம்பூர், புக்குழி,  திருக்கோணம் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவதுடன், இக்கிராமங்களில் உள்ள 185 விவசாய மின் இணைப்புகள், 2500 இதர  மின் இணைப்புகள் என மொத்தம் 2685 மின் இணைப்புகள் பயன்பெறும். இந்நிகழ்ச்சியில், மேற்பார்வைப் பொறியாளர் அம்பிகா,  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு, மின்சார வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − 82 =